உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வராத பஸ்கள்... வியாபாரிகள் புலம்பல்

வராத பஸ்கள்... வியாபாரிகள் புலம்பல்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம் அளித்த கோரிக்கை மனு:மத்திய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில், 84 கடைகள் உள்ளன. தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்களும், பல ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த பயணிகள் மற்றும் பஸ்களின் வருகையை கணக்கிட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பெரும்பாலான பஸ்கள், பயணிகளை பஸ் ஸ்டாண்டுக்கு வெளியிலேயே இறக்கி விடுகின்றனர்.இதனால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பயணிகள் பெரும்பாலும் ரோட்டிலேயே நின்று கொள்கின்றனர். அதேபோல் இரவு நேரங்களில் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் மத்திய பஸ் ஸ்டாண்டினுள் வந்து செல்வதில்லை. இதனால், பெரும் அவதி ஏற்படுகிறது. இவற்றை முறைப்படுத்தி அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் உட்புறம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை