உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டோரம் முளைத்த புதர் வாகன ஓட்டிக்கு அபாயம்

ரோட்டோரம் முளைத்த புதர் வாகன ஓட்டிக்கு அபாயம்

அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையம் செல்லும் வழியில் ராசாத்தம்மன் கோவில் அருகே மழைநீர் சேமிப்பு குட்டை உள்ளது. சமீப காலமாக பெய்த மழையில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றது.பல நுாறு மீட்டர் துாரம் ரோட்டோரமாக களைசெடிகள் முளைத்து, காடு போல புதர்களாக காட்சியளிக்கிறது. இதிலிருந்து அவ்வப்போது பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் திடீரென ரோட்டின் குறுக்கே வருவதாலும், புதர் மறைவில் படுத்து இருக்கும் நாய்கள் ஓடி வருவதால், டூவீலர்களில் வருபவர்களும், நடந்து செல்பவர்களும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.மேலும் அம்மாபாளையம் முதல் தேவராயம்பாளையம் வரை நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள செடிகளால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. குட்டையை மறைத்து செடிகள் உள்ளதால் பெரிய வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும் சிறிய வாகனங்கள் குட்டைக்குள் பாயும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக புதர்களை அகற்றி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி