உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேமிக்கும் விளை பொருளுக்கு கடன் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

சேமிக்கும் விளை பொருளுக்கு கடன் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

திருப்பூர்: ''திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்படும் தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் பொருளீட்டுக்கடன் வசதிகளை, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என, திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வனிதா தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது; வேளாண் விளைப் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் போது, விளைப் பொருட்களை குறைந்த வாடகையில், ஆறு மாதம் வரை, பாதுகாப்பாக இருப்பு வைத்து, விலை உயரும் போது, விற்பனை செய்யும் வகையில், திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கிடங்கு வசதி உள்ளது.கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளைப் பொருட்களுக்கு பொருளீட்டுக்கடன் வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு பொருளீட்டுக் கடனாக, 5 சதவீத வட்டியில், அதிகபட்சம், 5 லட்சம் ரூபாய் வரையும், விவசாயிகளுக்கு பொருளீட்டுக்கடன், 9 சதவீத வட்டியில் அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரையும் வழங்கப்படுகிறது.மேலும் சோளம், கம்பு, ராகி, மக்காசோளம் போன்ற விளைப் பொருட்களை சுத்தம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது; விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை