மேலும் செய்திகள்
சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
31-May-2025
அவிநாசி; அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றி தரக் கோரி மா.கம்யூ., கட்சி சார்பில் முதல் கட்ட பிரசார நடைப்பயண இயக்கம் துவங்கியது.அவிநாசி நகராட்சி கிளைகள் சார்பில் காந்திபுரம் பகுதியில் இருந்து துவங்கிய நடையணம், கஸ்துாரிபாய் வீதி, தாலுகா அலுவலகம், முத்துச்செட்டிப்பாளையம் வழியாக பண்ணாரி அம்மன் கோவில் முன்பு நிறைவடைந்தது.தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளன தலைவர் முத்துச்சாமி துவக்கி வைத்தார். மாவட்ட குழு பழனிச்சாமி, ஒன்றிய குழு தேவி, வேலுச்சாமி, பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திருமுருகன்பூண்டியில் மாவட்ட செயற்குழு நந்தகோபால் பிரசார இயக்கத்தை துவக்கி வைத்தார்.ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு வெங்கடாசலம்,பாலசுப்ரமணியம், நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
31-May-2025