வேர் பலம் இழந்த மரம் அகற்றப்படுமா?
திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரத்தில் கிழக்கு வீதியில் மாநகராட்சி மூலம் சாக்காடை கால்வாய் கட்டுதல், ரோடு போடும் பணி நடந்து வருகிறது. ஆரம்ப பள்ளி அருகில், இரண்டு ரோடு பிரியும் இடத்தில் மரம் ஒன்று பெரிதாக வளர்ந்து கிளைகள் அதிகமாக உள்ளது. சமீபத்தில் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட போது, மரத்தின் அடி வேர்களை தோண்டி விட்டனர். ரோடு போடுவதற்காக வேரை சுற்றியுள்ள மண் அகற்றப்பட்டுள்ளது. தற்போது, எந்த நேரத்திலும் விழும் சூழலில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, மரத்தை அகற்ற வேண்டும்.