கார் மோதி கவிழ்ந்தது மின் கம்பம் உடைந்தது
திருப்பூர்: கொடுவாய், எல்லப்பாளையம்புதுாரைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. அவரது உறவினர் மகன் உதயசங்கர், 15. இருவரும் நேற்று பிற்பகல் கொடுவாயிலிருந்து காங்கயம் நோக்கி, காரில் சென்றனர். காரை கார்த்திக் ஓட்டிச் சென்றார்.தேசிய நெடுஞ்சாலையில் காங்கயம் அடுத்த அகஸ்தியலிங்கம்பாளையம் அருகே வந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மின் கம்பம் மீது மோதி கவிழ்ந்தது. மின்கம்பமும் உடைந்து விழுந்தது.இதனால் மின்சாரம் தடைப்பட்டது. எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. அக்கம் பக்கத்தினர், காரில் பயணித்த இருவரையும் லேசான காயங்களுடன் மீட்டனர். விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.