உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அடுத்தடுத்து கார்கள் மோதல்

 அடுத்தடுத்து கார்கள் மோதல்

அவிநாசி: கோவை மாவட்டம், சூலுார் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் தனது காரில் ஈரோடு மாவட்டம், நம்பியூருக்கு சென்றுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த தண்ணீர் பந்தல் அருகே செல்லும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற காரின் மீது இடித்து பின்னர் எதிர்ப்புறம் சேவூரிலிருந்து அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீதும் மோதியது. சாலையோரம் இருந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான மரக்கடையில் புகுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கலைச்செல்வன் மற்றும் எதிர் திசையில் காரை ஓட்டி வந்த கருமபாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ