உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் அரிசி கடத்தல் மும்மடங்கு வழக்குகள்

ரேஷன் அரிசி கடத்தல் மும்மடங்கு வழக்குகள்

திருப்பூர்; ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கடத்துவது தொடர்பாக திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த, மூன்று மாதங்களில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, நுாறு வழக்குகள் பதியப்பட்டு, 110 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 25 டன் ரேஷன் அரிசி, 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுத்து, 4 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 'ரேஷன் அரிசி கடத்துபவர்கள், அதற்கு துணையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை