பிளாட்டோஸ் பள்ளிக்கு சாம்பியன்ஷிப் பட்டம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி அவிநாசி அருகேயுள்ள 'டீ பப்ளிக்' பள்ளியில் நடந்தது.இதில், பங்கேற்ற, ஆண்டிபாளையம் பிளாட்டோஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். 14 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில் பிரனேஷ் மற்றும் இரட்டையர் பிரிவில் பிரனேஷ், பிரனவ் முதலிடம். 17 வயது ஒற்றையர் பிரிவில் அஷ்வின்குமார் இரண்டாமிடம் மற்றும் இரட்டையர் பிரிவில் அஷ்வின்குமார், ரித்தீஷ் முதலிடம் மற்றும் 19 வயது ஒற்றையர் பிரிவில் இனியவன் இரண்டாமிடம்.பதிநான்கு வயது மாணவியர் ஒற்றையர் பிரிவில் பிரித்விகா மற்றும் இரட்டையர் பிரிவில் மோகிதா ஸ்ரீ, பிரித்விகா முதலிடம். 17 வயது பிரவில் ஆராஜெஸி மற்றும் இரட்டையர் பிரிவில் ஸ்ரீநிதி, ஆராஜெஸி முதலிடம். 19 வயது இரட்டையர் பிரிவில் ரிதன்யா, திவ்யஜனனி இரண்டாமிடம் பிடித்தனர்.டென்னிஸ் போட்டியில் சாதித்த மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சியாளர்கள் சந்தோஷ், சுரேஷ் ஆகியோரை பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.