உள்ளூர் செய்திகள்

சதுரங்க போட்டி

திருப்பூர்;திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ஏ.சி.எஸ்., நகர், ஆலயா அகாடமி பள்ளியில், மாவட்ட சதுரங்க போட்டி நடந்தது.பள்ளி நிர்வாக இயக்குநர் அஜய் அரவிந்த் துவக்கி வைத்தார். பல்வேறு பள்ளியிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். எட்டு வயது பிரிவில் ஆதித்யாரமேஷ், விவேகா, பத்து வயது பிரிவில் அகிலேஷ், ஷாஷினி, 12 வயது பிரிவில், அபினேஷ், பிரனீதா, 15 வயது பிரிவில் ஆகாஷ், மெர்சி முதலிடம் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வர் மோகனா பரிசு வழங்கினார். மாவட்ட செஸ் அசோசியேஷன் பொருளாளர் ராஜேந்திரன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ