உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குழந்தைகள் தின விழிப்புணர்வு

 குழந்தைகள் தின விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே கொடியசைத்து துவக்கிவைத்தார். கல்லுாரி மாணவியர், இளைஞர் நீதிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், தென்னம்பாளையம் வரை சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா, குழந்தைகள் நலக்குழு தலைவர் லுார்துமேரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை