உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா; நடனமாடிய மாணவர்கள்

பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா; நடனமாடிய மாணவர்கள்

உடுமலை; கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழா இறைவணக்கத்துடன் துவங்கியது. மழலையர் பிரிவு குழந்தைகள் விழாவை ஒருங்கிணைத்தனர்.தொடர்ந்து இயேசுவை போல வேடமணிந்தும் அவரின் பிறப்பு மற்றும் வாழ்க்கையை நாடகமாகவும், நடனமாகவும், பாடலாகவும் பாடினர். கிறிஸ்துமஸ் தாத்தாவாகவும் வேடமிட்டு மாணவர்கள் கொண்டாடினர். ஆசிரியர் சைமன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவது குறித்து பேசினார். விழாவில் பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி