உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சர்ச் பணியாளர் நலவாரிய துணை தலைவர் ஆய்வு

சர்ச் பணியாளர் நலவாரிய துணை தலைவர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். கிறிஸ்தவ சர்ச் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரிய துணை தலைவர் தயாநிதி, உறுப்பினர்கள் இமானுவேல், சத்திய பால்ராஜ் ஆகியோர், நலவாரிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு நடத்தினர். மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவர்களின் கல்லறைகளுக்கு, சுற்றுச்சுவர் கட்டுவது, புதிய கல்லறை அமைப்பதற்கு நிலம் கோருவது, புதிய சர்ச்கள் அமைப்பதற்கு தடையின்மைச்சான்று வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கல்பனா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ