உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளாட்டோஸ் பள்ளியில் கிளாஸ்பா 25 திருவிழா

பிளாட்டோஸ் பள்ளியில் கிளாஸ்பா 25 திருவிழா

திருப்பூர்: திருப்பூர், சின்னாண்டிபாளையத்தில் உள்ள பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில், 41 ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. லெப்டினன்ட் கர்னல் ஜெகதீசன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். டி.எஸ்.சி. நிர்வாக இயக்குநர் ரமேஷ்குமார் மற்றும் ஆல்வின் கம்பெனி நிர்வாக இயக்குநர் மலர்விழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 'பெற்றோர் தேர்வுகளுக்கு தங்கள் குழந்தைகளை தயார் செய்து கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றியும், மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு படிப்பதன் முறைகள் முக்கியத்துவம் மற்றும் அவசியம்,' குறித்தும் கர்னல் ஜெகதீசன் பேசினார். தொடர்ந்து, ராகுலின் டிரம்ஸ் இசை கச்சேரி, பேன்டசி வேர்ல்டு என்னும் கருப்பொருளில் அமைந்த கலை நிகழ்ச்சி அனைவரின் வரவேற்பை பெற்றது. முன்னதாக பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை