உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மையே சேவை மாணவர் விழிப்புணர்வு

துாய்மையே சேவை மாணவர் விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் (அலகு - 2) சார்பில், ரயில்வே ஸ்டேஷனில் துாய்மையே சேவை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சூரிய பிரகாஷ் பேசுகையில், ''துாய்மையே சேவை திட்டத்தில் மாணவர்கள் இணைந்து, பல்வேறு பகுதிகளில் துாய்மை பணி மேற்கொள்ளவேண்டும். அனைவரின் மத்தியிலும் துாய்மை செய்யும் எண்ணத்தை விதைக்கவேண்டும்,'' என்றார்.மாணவர்கள் புலி வேடமணிந்து வந்து, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடித்துக் காட்டினர். இதுதவிர நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரயில்வே சேலம் கோட்ட உறுப்பினர் சுரேஷ்குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை