மேலும் செய்திகள்
காத்திருக்கும் ஆபத்து; அதிகாரிகள் குறட்டை
1 minutes ago
இன்று இனிதாக
2 minutes ago
காந்தி நகர் சிக்னல் மூடல்; போக்குவரத்து எளிதானது
3 minutes ago
நாளை மின் நிறுத்தம்
3 minutes ago
உடுமலை: அமராவதி அணை சுற்றுலா மையத்தில், தூய்மைப்பணி முகாம் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத்தலமாக உள்ள அமராவதி அணைக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரி கின்றனர். அமராவதி அணையில் உள்ள அணை பூங்கா, பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி காணப் படுகிறது. இதனை, சுற்றுலாத்துறை வாயிலாக மேம்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமராவதி அணை சுற்றுலா மையத்தில், சுற்றுலாத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாசு கட்டுப் பாடு வாரியம் , உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம் மற்றும் பிரியா நர்சிங் கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து சிறப்பு துாய்மை பணி முகாம் நடந்தது. மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமை வகித்தார்.இந்த முகாமில் அமராவதி அணை பூங்காவிலிருந்து, 139 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை நிறுத்தி, மஞ்சப்பை பயன்படுத்துவோம் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் உள்ள மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், நீர்வளத்துறை உதவி பொறியாளர் இந்திர பிரசாத், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு சுற்றுலா ஆர்வலர்கள் நாகராஜ், சத்யம் பாபு, பிரசாந்த், உடுமலை சுற்றுச்சூழல் சங்க நிர்வாகிகள், பிரியா நர்சிங் கல்லூரி மாணவ மாணவியர், மலைவாழ் மக்கள், துாய்மைக் காவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
1 minutes ago
2 minutes ago
3 minutes ago
3 minutes ago