உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானிய விலையில் தென்னங்கன்றுகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு

மானிய விலையில் தென்னங்கன்றுகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு

உடுமலை : மடத்துக்குளம் வட்டாரத்தில், புதிதாக தென்னை நடவுக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில், தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் கூறியதாவது:மடத்துக்குளம் வட்டாரத்தில், 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நீண்ட கால பயிர் மற்றும் வருவாய் அளிப்பதாக உள்ளதால், தென்னைசாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.புதிய தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலும், வட கிழக்கு பருவ மழையை பயன்படுத்தி நடவு செய்யவும், மடத்துக்குளம் வட்டார விவசாயிகளுக்கு வழங்க, 1,760 நெட்டை ரக தென்னங்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. ஒரு தென்னங்கன்று, ரூ.65க்கு, மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தேவைக்கேற்ப, 10 முதல் அதிகபட்சமாக எவ்வளவு தென்னங்கன்றுகள் பெற்றுக்கொள்ளலாம்.70 தென்னங்கன்றுகளுக்கு மேல், புதிதாக நடவு செய்யும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலை துறை வாயிலாக பின்னேற்பு மானியமாக, தென்னை வளர்ச்சி வாரியம் வழங்கும் மானியம் பெற்று தரப்படும்.எனவே, புதிதாக தென்னங்கன்று நடவு செய்ய விரும்பும் விவசாயிகளும், காய்ப்புத்திறன் குறைவாக உள்ள மரங்களை அகற்றி விட்டு, புதிதாக நடவு செய்யும் விவசாயிகளும் தென்னங்கன்றுகளை வாங்கி நடவு செய்து பயன்பெறலாம்.தென்னங்கன்று தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார் நகல் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787 ; பூவிகா தேவி 80720 09226 ; பபிதா 85250 25540 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ