உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவை - ராமேஸ்வரம் ரயில் வரும், 8ல் இயக்கம் துவக்கம்

கோவை - ராமேஸ்வரம் ரயில் வரும், 8ல் இயக்கம் துவக்கம்

திருப்பூர்: கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு செவ்வாய் தோறும் வாராந்திர ரயில் இயக்கப்பட்டது. ராமேஸ்வரம் தீவை ராமநாதபுரத்துடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலம் பணி துவங்கியதால், 2019ல் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.கோவையில் இருந்து புறப்படும் ரயில் ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்பட்டது; மண்டபம், ராமேஸ்வரம் செல்லவில்லை. ரூ. 550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் பணி முடிந்து, ஏப். 6ம் தேதி பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளது. இதனால், ஆறு ஆண்டுகள் பின் மீண்டும் கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்கம் துவங்க உள்ளது.ரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில்,' பயணிகள் வசதிக்காக கோவை - ராமேஸ்வரம் ரயில் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல், 6ல் பிரதமர் பாலத்தை திறந்த பின், ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் சென்று வர ஒப்புதல் வழங்கப்படும். இதனையடுத்து, ஏப். 8ம் தேதி (செவ்வாய்) இரவு முதல் கோவை - ராமேஸ்வரம் இயங்க ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளது. முன்பாக, டிக்கெட் முன்பதிவு குறித்த அறிவிப்பு, பயணிகளுக்கு தெரிவிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R Hariharan
மார் 29, 2025 10:38

தென்காசி வர்த்தகர்கள் சார்பில் பெங்களூரு செங்கோட்டை ரயில் விட வேண்டுமென்று திரு அண்ணாமலையிடம் கோரிக்கை கொடுத்துள்ளார்கள். இந்த ரயில் மிகையும் அவசியம். உடனடிக நிறைவேற்ற வேண்டும். தூத்துகுடி நாகர்கோவில் இரண்டும் மதுரை விருதுநகர் வழியாக செல்கிறது. விருதுநகர் செங்கோட்டை மார்க்கத்தில் ரயில் சேவை இல்லை. கூடிய விரைவில் விட வேண்டும். மற்றும் செங்கோட்டை ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருப்பதி, கோவை, மும்பை, கொல்கத்தா, நியூ டெல்லி, ஹைதெராபாத், செங்கோட்டை திருச்சி வலி அருப்புக்கோட்டை கரைக்கடுடி இன்டெர் சிட்டி எக்ஸ்பிரஸ் வேண்டும்.. மேலும் மும்பை மதுரை , நியூ டெல்லி மதுரை செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை