மேலும் செய்திகள்
அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது
08-Mar-2025
பல்லடம் : பல்லடம் அடுத்த பொங்கலுாரை சேர்ந்த ரவி மகன் சாய்ராகவன், 18; திருப்பூர், அம்மன் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் ராமதர்ஷன், 19. இருவரும், சூலுார் தனியார் கல்லுாரியில்பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படிக்கின்றனர். நேற்று காலை, ஸ்கூட்டரில், இருவரும் கல்லுாரிக்கு புறப்பட்டனர்.காரணம்பேட்டை அருகே, முன்னால் சென்ற காரை இடதுபுறமாக ஓவர் டேக் செய்ய முயன்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புற 'பம்பர்' மீது அதிவேகத்தில் ஸ்கூட்டர் மோதியது. சாய் ராகவன் அதே இடத்தில் இறந்தார். ராமதர்ஷன், படுகாயங்களுடன் கோவை தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Mar-2025