தேசிய தடகளத்தில் சாதித்த வீராங்கனைக்கு பாராட்டு
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் தடகள வீராங்கனை ஸ்ரீவர்த்தனிக்கு, 2024-2025 ஆண்டிற்கான தேசிய தடகளத்தில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றமைக்காக 3 லட்சம் ரூபாய்; 4*400மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றதற்காக 1.5 லட்சம் ரூபாய் என 4.5 லட்சம் ரூபாய் தொகைக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி வழங்கினர். ஸ்ரீவர்த்தனி, அவரது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் அழகேசன் ஆகியோருக்கு நேற்று கொங்கு விளையாட்டு அறக்கட்டளையின் தலைவர் ராமகிருஷ்ணன் சால்வை அணிவித்து பரிசு வழங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் தங்கராஜூ, ஹேண்ட்பால் பயிற்சியாளர் நவீன்குமார், தடகள வீராங்கனை தீபிகா, ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர், வீராங்கனைகளும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.