மேலும் செய்திகள்
Love | படம் எப்டி இருக்கு? | web series review
04-Oct-2026
அதிகாரிகள் கவனத்துக்கு... திருப்பூர், தாராபுரம் ரோடு, எஸ்.ஆர்.டி. பஸ் டிப்போ முன்புறம் சாலை சேதமாகி சரிசெய்யவில்லை. சாலையின் பாதி வரை பேரிகார்டு தடுப்பு வைத்துள்ளனர். – மீனாட்சிசுந்தரம், தாராபுரம் ரோடு. (படம் உண்டு) ரோடு படுமோசம் 1. போயம்பாளையம், மும்மூர்த்திநகர், ஏ.கே.ஆர். சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. – வசந்தி, மும்மூர்த்திநகர். (படம் உண்டு) 2. அவிநாசிலிங்கம்பாளையம், பெரியார் காலனியில் உள்ள கான்கீரிட் சாலை சேதமாகி மழைநீர் தேங்கி நிற்கிறது. – பாலா, அவிநாசிலிங்கம்பாளையம். (படம் உண்டு) 3. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி. மில் பாலம் ரவுண்டானா வளைவில் சாலை பாதி துாரம் வரை சேதமாகியுள்ளது. – ராஜகோபால், அணைக்காடு. (படம் உண்டு) அசுத்தமான கால்வாய் திருப்பூர், 42 வது வார்டு, தனலட்சுமி லே–அவுட் மணல் தோட்டம் பகுதியில் கால்வாயில் குப்பை நிறைந்துள்ளது. – ஞானசேகரன், பாரப்பாளையம். (படம் உண்டு) வீணாகும் கழிப்பிடம் குண்டடம், எல்லப்பாளையம்புதுார், சக்திவிநாயகபுரத்தில் பொதுக்கழிப்பிடம் கட்டி, மின்இணைப்பு வழங்காததால், திறக்கப்படாமல் வீணாகி வருகிறது. – பாலாஜி, கொடுவாய். (படம் உண்டு) கழிவுநீரால் அவதி 1. பொங்குபாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே வெளியேற வழியின்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. – நாகராஜ், பொங்குபாளையம். (படம் உண்டு) 2. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையம் பஸ் ஸ்டாப், ராயக்கோட்டை காலனியில் கால்வாய் கட்ட வேண்டும். குடியிருப்பு அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. – ராஜவேலு, பாரப்பாளையம். (படம் உண்டு) காத்திருக்கும் ஆபத்து ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, தட்டாங்குட்டை – அத்திக்காடு ரோட்டில் மழையால் உருவான திடீர் குழியை மூட வேண்டும். – குட்டிகுமார், ஈட்டிவீரம்பாளையம். (படம் உண்டு) வீணாகும் தண்ணீர் திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், காதர்சலீமா திருமண மண்டபம் முன் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. – செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு) திருப்பூர், சூசையாபுரத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு அதிகளவில் குடிநீர் வீணாகிறது. – ஷாஜகான், சூசையாபுரம். (படம் உண்டு) தெருநாய் தொல்லை திருப்பூர், சாஸ்திரிநகர் இரண்டாவது வீதியில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. – திருநாவுக்கரசு, சாஸ்திரிநகர். (படம் உண்டு) ரியாக் ஷன் குப்பை அள்ளிட்டாங்க திருப்பூர், ஜீவா காலனி கொட்டப்பட்டிருந்த குப்பை அள்ளி விட்டனர். – பழனிசாமி, ஜீவாகாலனி. (படம் உண்டு) திருப்பூர், காந்திநகர், பத்மாவதிபுரம் மாநகராட்சி பள்ளி வீதியில் நிறைந்திருந்த குப்பை அகற்றப்பட்டு விட்டது. – பாலா, பத்மாவதிபுரம். (படம் உண்டு) ஆபத்து நீங்கியது அவிநாசி, ராயம்பாளையம், நடுவச்சேரியில் பனைமரத்தின் ஒரு பகுதி சேதமாகி விழும் நிலையில் இருந்தது. செய்தி வெளியானதால், அகற்றப்பட்டு விட்டது. – செந்தில்குமார், ராயம்பாளையம். (படம் உண்டு)
04-Oct-2026