பறிமுதல் குட்கா தீ வைத்து அழிப்பு
குன்னத்துார்: குன்னத்துார் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட, 254 கிலோ புகையிலை பொருட்கள் ஊத்துக்குளி ஜே.எம். கோர்ட் உத்தரவுப்படி குன்னத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா, பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் இளங்கோவன், ஆர்.ஐ. ரமேஷ் ஆகியோர் முன்னிலையில், காட்டுப்பகுதியில் தீ வைத்து அழிக்கப்பட்டன.