உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்சிக்கன வார விழா போட்டி வென்ற மாணவியருக்கு பாராட்டு

மின்சிக்கன வார விழா போட்டி வென்ற மாணவியருக்கு பாராட்டு

உடுமலை : மின் சிக்கனவாரவிழாவையொட்டி நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.பள்ளி மாணவர்களிடம், மின்சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதன்படி,உடுமலை வட்டாரத்தில் மின் சிக்கன வாரவிழாவையொட்டி ஒவ்வொரு அரசுப்பள்ளிகளிலும் உள்ள ஆற்றல் மன்றத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, வினாடிவினா போட்டிகள் நடந்தது.இப்போட்டிகளில், பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவியர், ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, உடுமலை மின்சார வாரியத்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து பரிசுகள் வழங்கப்பட்டன.இப்போட்டியில் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவியரும் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவியருக்கும், பள்ளி ஆற்றல் மன்ற பொறுப்பாசிரியர் விஜயலட்சுமிக்கும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.இது போல் பல்வேறு போட்டிகளை நடத்த பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை