உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடரும் மழை; சுடாத சூரியன்

தொடரும் மழை; சுடாத சூரியன்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை நேரம், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், சராசரியாக, 9.66 மி.மீ., மழை பெய்துள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 48 மி.மீ., - திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 30; திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதிகளில் 26; உப்பாறு அணைப்பகுதியில் 25; அமராவதி அணை பகுதியில் 20 மி.மீ., என, மாவட்டத்தில் ஐந்து இடங்களில் மிதமான மழை பெய்தது.அவிநாசி தாலுகா அலுவலக பகுதியில் 13 மி.மீ., - கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 10.50 என, லேசான மழை பதிவாகியுள்ளது.தொடரும் மழையால் தற்போது, மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை