உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூட்டுறவுத்துறை குறைகேட்பு

கூட்டுறவுத்துறை குறைகேட்பு

திருப்பூர் : கூட்டுறவுத்துறையில் பணியாற்றிய பணியாளர் மற்றும் பணியாற்றி வரும் பணியாளரின் கோரிக்கையை கேட்டு, நிவர்த்தி செய்யும் வகையில், மாதாமாதம் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.அதன்படி, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில், குறைகேட்பு கூட்டம் நடந்தது.துணை தலைவர் சரவணன் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில், இணை பதிவாளர் பிரபு, கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கையை கேட்டறிந்தார்.கூட்டுறவு பணியாளர் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களை சேர்ந்த குடும்பத்தினர், துறைசார்ந்த நடவடிக்கை கோரி, மனு கொடுத்தனர்.ஓய்வூதிய உதவி, கருணை ஓய்வூதியம், பண பலன்கள் போன்ற கோரிக்கைக்காக, 15 பேர் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை