உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூட்டுறவு முதன்மை செயலர் ரேஷன் கடைகளில் ஆய்வு

கூட்டுறவு முதன்மை செயலர் ரேஷன் கடைகளில் ஆய்வு

திருப்பூர்: தமிழக அரசின் கூட் டுறவுத்துறை முதன்மை செயலர் சத்ய பிரதா சாஹூ, அவிநாசி - மங்கலம் ரோட்டில் இயங்கும் கூட்டுறவு பெட்ரோல் பங்க்கில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடை, நுகர்பொருள் வணிக கிடங்குகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்காக, கூட்டுறவுத்துறை முதன்மை செயலர் சத்ய பிரதா சாஹூ வந்திருந்தார்; முன்னதாக, திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடத்தும், முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டார்; பொதுமக்கள், மருந்து, மாத்திரைகளை பெற்று பயனடைவது குறித்து கேட்டறிந்தார்.குறிப்பாக, திருப்பூர் மற்றும் அவிநாசி பகுதிகளில் உள்ள, ரேஷன் கடைகளில், 'டிஜிட்டல்' தராசு மற்றும் 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் இணைந்து, துல்லியமாக அளவீடு செய்வதையும் ஆய்வு செய்தார்.அதன்பின், திருப்பூர் கூட்டுறவு பண்டகசாலை, மாவட்ட நுகர்பொருள் குடோன்கள்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் அவிநாசி குடோன், அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் அவிநாசியில் இயங்கும், பெட்ரோல் பங்க் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கூட்டுறவு இணை பதிவாளர் பிரபு, பொது வினியோக திட்ட துணை பதிவாளர் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி