ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்
உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில், ஒரு கிலோ ரூ.213.16க்கு விற்பனையானது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை மற்றும் தேங்காய் ஏலம், இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை சுற்றுப்புற பகுதியிலிருந்து, 10 விவசாயிகள், 49 மூட்டை அளவுள்ள, 2,700 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 8 விவசாயிகள் பங்கேற்றனர். இதில், முதல் தரம், ரூ.205.76 முதல், அதிகபட்சமாக, 213.16க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் கொப்பரை, ரூ.146 முதல், 185.76 வரை விற்பனையானது. மொத்த மதிப்பு, 4 லட்சத்து, 44 ஆயிரத்து, 109 ரூபாய் ஆகும். அதே போல், உரித்த தேங்காய் ஏலத்திற்கு, இரு விவசாயிகள், 400 காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ, ரூ.59.10 முதல், அதிகபட்சமாக, ரூ.63.62க்கு விற்பனையானது. மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தெரிவித்துள்ளார்.