உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாடு வர்த்தகம் ஜோர்  

மாடு வர்த்தகம் ஜோர்  

அமராவதிபாளையத்தில், திங்கள்தோறும் கால்நடைச் சந்தை நடக்கிறது. பண்டிகைக்கு பின் கடந்த வாரம் வரத்து குறைந்திருந்த நிலையில், தமிழ்ப்புத்தாண்டு என்பதால், நடப்பு வாரமும் வரத்து குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக நேற்று, 979 கால்நடைகள் வந்தன.கால்நடைகளை வாங்கவும், விற்கவும், 2,000 பேர் வந்திருந்தனர். கன்றுகுட்டி, 2,000 - 4,000, காளை, 29 ஆயிரம் - 31 ஆயிரம், எருமை, 25 ஆயிரம் - 27 ஆயிரம், பசு மாடு, 27 ஆயிரம் - 31 ஆயிரம் ரூபாய் என விற்றது.'வரத்து அதிகரிப்பதால், கன்றுகுட்டி விலை குறைந்தது; நேற்று, 1.56 கோடி ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்தது,' என, மாட்டுச்சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை