உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் முதலை வாய் பிள்ளை மீட்ட பெருவிழா

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் முதலை வாய் பிள்ளை மீட்ட பெருவிழா

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர முதலை வாய் பிள்ளை மீட்ட ஐதீகப் பெருவிழா நடந்தது.கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் அவிநாசியப்பர், கருணாம்பிகையம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் முதலையுண்ட பாலகனின் பெற்றோர்கள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று முதலை வாயிலிருந்து பாலகன் மீண்டு வந்த அற்புத நிகழ்ச்சி நடந்தது.இதில், சிரவை ஆதீனம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி திருமடம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், செஞ்சேரி மலை முத்து ராமலிங்க சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முதலை வாய் பிள்ளை மீட்ட தல வரலாறு நிகழ்வைக் கண்டு பரவசம் அடைந்தனர். நேற்று காலை சந்திர சேகரர், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள உமையஞ் செட்டியார் தண்ணீர் பந்தல் வளாகத்தில் ஸ்ரீ சுந்தரர் கட்டமுது விழா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை