உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரே நேரத்தில் ரிடர்ன் பஸ்களில் மக்கள் கூட்டம் 

ஒரே நேரத்தில் ரிடர்ன் பஸ்களில் மக்கள் கூட்டம் 

திருப்பூர்:பள்ளிகள் விடுமுறை விட்ட போது, சொந்த ஊருக்கு சென்ற குழந்தைகள் பலர், சனி, ஞாயிறு இரு நாட்கள் திருப்பூர் திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பின் நேற்று மாலை பலரும் திருப்பூர் திரும்பினர்.பெற்றோர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு 'லக்கேஜ்' சகிதமாக பஸ்விட்டு இறங்கினர். வெளியூரில் இருந்து வந்திறங்கியவர், பிற ஊர்களில் இருந்து திருப்பூர் வந்தவர் ஒரே நேரத்தில் திரண்டதால், திருப்பூர் - காமராஜ் ரோடு, மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் திடீரென கூட்டம் அதிகரித்தது.பழநி, பொள்ளாச்சி, கோவை பஸ் ரேக் எதிர்புறம், நுாற்றுக்கணக்கான பயணிகள் குழுமியிருந்தனர். விடுமுறை தினம் என்பதால், போலீசார், போக்குவரத்து அலுவலர்கள் இல்லை. பயணிகளே ஒருவருக்கொருவர் முண்டியடித்து பஸ் ஏறிச்சென்றனர். திருப்பூருக்கு நேற்று வந்த ரயில்களில் பொது பெட்டிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை