கிரிப்டோ கரன்சி மோசடி; கமிஷனரிடம் புகார் மனு
திருப்பூர்; திருப்பூரில், கிரிப்டோ கரன்சி முதலீட்டில், 46.84 லட்சம் ரூபாய் ஏமாற்றி நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர். இதுகுறித்து திருப்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 13 பேர் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், திருப்பூர் பொம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கிரிப்டோ கரன்சியில் நல்ல வருமானம் வருவதாக ஆசை வார்த்தை கூறி, 13 பேரிடம், 46 லட்சத்து, 84 ஆயிரம் ரூபாய் பெற்றார். பணம் பெற்று, ஒரு ஆண்டாகியும், எந்த வித லாப பணமும் கொடுக்கவில்லை. நாங்கள் வீட்டு பத்திரங்களை அடமானம் வைத்து பணத்தை கொடுத்தோம். பணத்தை திருப்பி கேட்டால் கொடுக்காமல் ஏமாற்றுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்,' என்று கூறியுள்ளனர்.