வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வடிவேல் ஒரு படத்தில் சொல்வது மாதிரி, யார் யார் மனைவி உத்தமியோ அவுங்க கண்ணுக்கு மட்டும்தான் இந்த பறக்கும் பாலம் தெரியும்.
திருப்பூர்; அணைப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.திருப்பூரில், மங்கலம் ரோடு மற்றும் காலேஜ் ரோட்டை இணைக்கும் வகையில், அணைப்பாளையம் உள்ளது. நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே வழித்தடமும், இந்த ரோட்டில் குறுக்கிடுகிறது. ரயில்வே வழித்தடத்தை கடந்து செல்ல, கழிவுநீர் செல்லும் சிறிய சுரங்கபாலமும்; நொய்யல் ஆற்றை கடக்க தரைமட்ட பாலமுமே உள்ளன. இதையடுத்து, மங்கலம் ரோடு, பாரப்பாளையம் முதல், காலேஜ் ரோடு அணைப்பாளையம் வரை, நொய்யலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க, கடந்த 2006 - 07ம் ஆண்டில், நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது.நிதி ஒதுக்கி, நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், நிலம் எடுப்பதில் தனியார் சிலரின் குறுக்கீடு, நீதிமன்ற வழக்கு போன்றவற்றால், பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாதியாக கட்டப்பட்ட பாலம், நொய்யல் ஆற்றில் உள்ளது. பாலத்தின் பில்லர்கள் மட்டும் வானம் பார்த்தபடி நிற்கின்றன. திட்ட மதிப்பீடு தயாரிக்கும் போது அதிகாரிகள் கவனம் செலுத்தாதது, தனி நபர்கள் சிலரால் பாலம் கட்டுமான பணி முடங்கி, அரசு நிதி வீணாகிவருகிறது.அப்பகுதியினர் கூறுகையில், 'தமிழகத்திலேயே ஒரு பாலம் கட்ட, இவ்வளவு ஆண்டுகள் எடுத்து கொண்டது அணைப்பாளையம் பாலமாகத்தான் இருக்கும். பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பாலம், கடந்த மூன்று மாதம் மீண்டும் கட்டுமானப்பணி துவங்கியது. ஆனால், கடந்த ஒரு மாதமாக மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணிகளை விரைந்து துவக்க வேண்டும்,' என்றனர்.
வடிவேல் ஒரு படத்தில் சொல்வது மாதிரி, யார் யார் மனைவி உத்தமியோ அவுங்க கண்ணுக்கு மட்டும்தான் இந்த பறக்கும் பாலம் தெரியும்.