உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டெங்கு ஒழிப்பு உறுதிமொழியேற்பு

டெங்கு ஒழிப்பு உறுதிமொழியேற்பு

திருப்பூர் : ஆண்டுதோறும் மே மாதம் 16ம் தேதி, தேசிய டெங்கு தினமாக பின்பற்றப்படுகிறது.அவ்வகையில், நேற்று, திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் டெங்கு ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நடந்தது. அவிநாசி ரோடு, டி.எஸ்.கே., மாநகராட்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்த உறுதிமொழி ஏற்புக்கு, மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.முதுநிலை மருத்துவ அலுவலர் கலைச் செல்வன், பூச்சியியல் நிபுணர் சாந்தி முன்னிலை வகித்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுதி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ