உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வெளி மாநில தொழிலாளர்கள் 2.20 லட்சம் பேர் விவரங்கள் பதிவு

 வெளி மாநில தொழிலாளர்கள் 2.20 லட்சம் பேர் விவரங்கள் பதிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, இரண்டு லட்சத்து, 20 ஆயிரத்து 30 வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்கள், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. அனைத்து தொழில் நிறுவனங்களும் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பினை கருத்தில் கொண்டு புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை தமிழக அரசின் labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் பதிவு செய்யுமாறு தொழிலாளர் துறை கேட்டுக்கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு லட்சத்து, 20 ஆயிரத்து 30 வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு சான்று பெற்று, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். தொழிற்சாலைகள், தொழிலாளியின் பங்களிப்பாக, தொழிலாளர் நலவாரியத்திற்கு Iwmis.lwb.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக செலுத்துதல் வேண்டும். அனைத்து தொழில்களிலும் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் https://eshram.gov.inபோர்டலில் சென்று சுயமாகவோ, 'இ-சேவை' மையம் வாயிலாகவோ தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி, ஒருங்கிணைந்த வருடாந்திர அறிக்கையினை ஜனவரி 31ம் தேதி அல்லது அதற்கு முன்னர் நிறுவனம் அமைந்துள்ள பகுதியின் சம்பந்தப்பட்ட தொழிலாளர் ஆய்வாளருக்கு சமர்ப்பிக்க வேண்டுமென, தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரிஅறிவித்துள்ளார். தொழிலாளர் துறை அதிகாரிகள் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பு கூட்டாய்வுகள் நடத்தப்பட்டன. சட்டமுறை எடையளவு சட்ட ஆய்வுகளில், எடை குறைவு, முத்திரை மற்றும் மறுமுத்திரை இல்லாத எடை அளவுகள் வைத்திருத்தல்; தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்று இல்லாதது, சோதனை எடைக்கற்கள் இல்லாதது என, 30 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. பொட்டல பொருட்கள் சட்டத்தில், நான்கு முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நல சட்டங்களை மீறிய குற்றங்களுக்காக 62 நிறுவனங்கள் மீது முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கூலி வழங்காத இரு நிறுவனங்கள் உட்பட, 107 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. நிறுவனங்களிலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது; 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர் அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயமற்ற பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், முறையான முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என தொழிலாளர் துறை உதவி கமிஷனர்(அமலாக்கம்) காயத்ரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை