உள்ளூர் செய்திகள்

பக்தர் பலி

திருப்பூர் : ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் ராமன், 60. சுந்தரம், 44, பொன்னுசாமி, 40, துரையன், 42, அமல்ராஜ், 40 மற்றும் பொன்னுசாமி, 28 ஆகியோர் சில நாட்களுக்கு முன் கோபியில் இருந்து கிளம்பி, பழநிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர்.காங்கயம், தாராபுரம் வழியாக சென்ற போது, நேற்று அதிகாலை தாராபுரம் அருகே அவ்வழியாக வந்த கார், ஆறு பேர் மீது மோதியது. அதில், ராமன் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார்.ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி