மேலும் செய்திகள்
மரபு கவிதை எழுதுதல் போட்டி
14-Nov-2024
அனுப்பர்பாளையம்: அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் இன்று திருப்பூர் வருகிறார். மராத்தான் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்க உள்ளார்.அ.ம.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி அறிக்கை :அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன், பிறந்தநாளை முன்னிட்டு, மராத்தான் ஓட்டம், நாளை (இன்று) காலை திருப்பூரில் நடக்கிறது. காலேஜ் ரோடு, சவுடாம்பிகா திருமண மண்டபம் முன் துவங்கி, மீண்டும் அதே இடத்தில் நிறைவு பெறுகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பொது செயலாளர் தினகரன், பங்கேற்று பரிசுகள் வழங்குகிறார்.பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆண்கள் - பெண்கள் என ஆறு பிரிவுகளில் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு, 5 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு மூன்றாயிரம் ரூபாய் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
14-Nov-2024