மேலும் செய்திகள்
58 டன் பட்டாசு கழிவு மாநகரில் அகற்றம்
03-Nov-2024
திருப்பூர்; நல்லாத்துப்பாளையம், ஜெய் நகரில் பழுதாகி நின்ற வாகனம் சரி செய்தும், தேங்கிக் கிடந்த குப்பையும் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லாத்துப்பாளையம் பகுதியிலுள்ள ஜெய் நகரில், குப்பை அகற்றும் பணிக்கு வந்த வாகனம் டயர் பஞ்சராகி ஒரு வாரமாக குப்பை தேங்கிக் கிடந்த இடத்தில் நின்று கிடந்தது. குப்பைகளும் அகற்றப்படாமல் சுகாதாரக்கேடு நிலவியது. இது குறித்து நேற்று 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதனையறிந்த மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், தேங்கிக் கிடந்த குப்பை உடனடியாக அகற்றி, பிளீச்சிங் பவுடர் தெளித்து சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அலுவலர்களுக்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
03-Nov-2024