மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
உடுமலை: உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டியை, பள்ளி துணைச்செயலாளர் கோபால், பள்ளி முதல்வர் பூரணி துவக்கி வைத்தனர்.போட்டியில் மாணவர்கள் பிரிவில், 30 அணிகளும், மாணவியர் பிரிவில், 26 அணிகளும் பங்கேற்கின்றன. துவக்க விழாவில், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இப்போட்டிகள் நேற்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.போட்டிக்கான ஏற்பாடுகளை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட உடற்கல்வி அலுவலர் ரகு மற்றும் திருப்பூர் மாவட்ட கைப்பந்து சங்கம் இணைந்து செய்தனர்.