மேலும் செய்திகள்
அக்., 14ல் ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
30-Sep-2024
திருப்பூரை பொறுத்தவரை, சரஸ்வதி பூஜை வழிபாடு நடக்கும் நாளிலேயே, தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது வழக்கமாக இருந்தது.திருப்பூரில் இருந்து, 15 கி.மீ., சுற்றளவில் உள்ள ஊர்களை சேர்ந்த மக்கள், தீபாவளி பர்சேஸூக்கு திருப்பூருக்கு தான் வருகின்றனர். திருப்பூரில் உள்ள முன்னணி பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள், அதிரடியான தள்ளுபடி சலுகையுடன், தீபாவளி விற்பனையை துவக்க தயாராகிவிட்டன.பண்டிகையை முன்னிட்டு, புதிய ரோட்டோர கடைகள் அமைக்கப்படும். தொழிலாளர் நிறைந்த பகுதி என்பதால், தீபாவளி பர்சேஸ், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் களைகட்டப்போகிறது. இன்று துவங்கி, நான்கு ஞாயிறு மட்டுமே உள்ளன.இந்த வாரத்தில் இருந்தே, கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் தென்பட துவங்கிவிடும். வரும், 13, 20 மற்றும் 27ம் தேதிகளில், கூட்டம் அலைமோதும் என்பதால், முன்கூட்டிய ஜவுளி எடுக்கவும், பொருட்களை வாங்கவும், சிலர் முன்கூட்டியே தயாராகிவிடுவது வழக்கம். அதன்படி, இன்றிலிருந்தே கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொது செயலாளர் சேகர் கூறுகையில், ''இந்தாண்டு, 15 நாட்களுக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவாக போனஸ் வழங்க வேண்டும்; கடந்தாண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். குறிப்பாக, 'பீஸ் ரேட்' தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, போனஸ் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன,'' என்றார்.
30-Sep-2024