மேலும் செய்திகள்
நீர்நிலைகளில் எச்சரிக்கை; அறிவிப்பு பலகை வைப்பு
22-Nov-2024
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 52வது வார்டுக்கு உட்பட்ட தென்னம்பாளையத்தில், செல்வபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. மாநகராட்சி பள்ளி வீதி வழியாக பூம்புகார் கிழக்கு குடியிருப்புக்கு செல்லும் பிரதான ரோட்டில் இப்பகுதி உள்ளது.இந்த ரோட்டோரம் குப்பை கழிவுகள் கொண்டு வந்து வீசப்படுகிறது. இதனால், ரோட்டை ஒட்டி அமைந்துள்ள வீடுகளில் பெரும் துர்நாற்றம், கொசு உற்பத்தி மற்றும் காற்றில் பறக்கும் குப்பைகள் விழுந்தும் அவதி நிலவுகிறது.இதனால், அப்பகுதியினர் அந்த இடத்தில், ஒரு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில், 'இங்கு குப்பை கொட்டாதீர்கள்; மீறினால், தண்டிக்கப்படுவீர்கள்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.இது குறித்து செல்வபுரம் பகுதியினர் கூறியதாவது:செல்வபுரம் குடியிருப்பு பகுதியில் வீடுவீடாக வந்து துாய்மைப் பணியாளர்கள் குப்பையை பெற்றுச் செல்கின்றனர். பூம்புகார் கிழக்கு பகுதியில் ஏராளமான காம்பவுண்ட் வீடுகள் உள்ளன. துாய்மைப் பணியாளர்கள் வரும் போது, அதில் வசிப்போர் இருப்பதில்லை. இதனால், தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை இங்கு ரோட்டோரம் வீசிச் சென்று விடுகின்றனர்.இந்த செயலை குடியிருப்போர் அல்லது வீட்டு உரிமையாளர்கள் தடுக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் குப்பைத் தொட்டி வைத்தால் கூட இப்பிரச்னை தீரும். இப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள். இதனால், அவர்களுக்கு ஹிந்தியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
22-Nov-2024