உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறமுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சி, அவ்வப்போது வழங்கப்படுகிறது.வரும், 22ம் தேதி, காலை, 9:30 மணிக்கு, லாபகரமான செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு தொடர்பான கட்டண பயிற்சியும், வரும், 31ம் தேதி, காலை, 9:30 மணிக்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான கட்டணப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சியிலும் சேர விருப்பமுள்ளவர்கள், 500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு பயிற்சியிலும், 30 பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவர்; முதலில் முன்பதிவு செய்வோருக்கு, முன்னுரிமை வழங்கப்படும்.விருப்பமுள்ள விவசாயிகள், அலுவலக நாட்களில், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, 0421 - 2248524 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, பெயர் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்படும், பயனாளிகளுக்கு நோட்டு புத்தகம், மதிய உணவு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான புத்தகம், சான்றிதழ் வழங்கப்படும் என, மைய தலைவர் டாக்டர். மதி வாணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை