வாசகர்கள் கருத்துகள் ( 2 )
// இவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை அரசு வழியாக செலுத்தும் பொழுது திறமையானவர்கள் ஆட்சியில் இருந்தால் தான் நீங்கள் செலுத்தும் வரி உங்களுக்கு சேவையாக, ரோடாக அமையும். // உங்களின் இக் கருத்து உண்மையானது... ஆயினும் , மக்களுக்காக மக்களே உருவாக்கிக் கொண்ட அரசு எனும் அமைப்பில் உள்ள " மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் " திறமையானவர்களாக இருந்தால் மட்டும் போதாது... மேலும் அவர்கள் கட்டாயமாக மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட பொதுநலவாதிகளாகவும் இருக்க வேண்டும். திறமையும் முக்கியம் சமுதாய நலம் எனும் உணர்வும் , பொதுநல சிந்தனையும் மிக மிக அவசியம். " தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் மடையன் ... " யாரோ கூறிச் சென்ற ஓர் அருமையான வாழ்வியல் உண்மை.
வரி உயர்வு என்பது பொதுவாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. சொத்து வரி, குடிநீர் வரி, பெட்ரோல் டீசல் மீதான ஆய திருவை வரி, நேரடி வருமான வரி என்று பல வரிகள் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. வரி அதிகரிப்பை குறை சொல்லுவதை விட அவ்வாறு வசூலிக்கப்படும் வரி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும் பார்ப்பது நல்லது. அரசின் செலவினத்தில் பெரும் பகுதி அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு செல்லுகிறது. இன்று அரசு ஊழியர் பெறும் சம்பளம் யார் யாரெல்லாம் கொடுக்கிறார்கள் என்று பாருங்கள்? மொப்பாட் வண்டியில் 2 லிட்டர் பெட்ரோல் அடித்து பிளாஸ்டிக், ஈய பாத்திரங்களை விற்கும் ஒருவர் அரசு செலவினத்திற்கு 100 ரூபாய் கொடுக்கிறார். அவருடைய உழைப்பின் பெரும் பகுதி இது. அவர் கொடுத்த நூறு ரூபாயில் நேரடியாக மாநில அரசுக்கு 50 ரூபாயும் மறைமுகமாக மாநில அரசுக்கு மேலும் பத்து ரூபாய் கிடைக்கும். அதை முழுவதையும் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு கொடுத்து விடுகிறது மாநில அரசு. அடுத்த முறை அரசு அலுவலகத்தில் சென்று ஒரு சான்றிதழ் கேட்கும்பொழுது உரிமையுடன் கேட்க வேண்டும் நான் கொடுத்த வரியில் தான் உங்கள் சம்பளம் கிடைக்கிறது என்று. இவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை அரசு வழியாக செலுத்தும் பொழுது திறமையானவர்கள் ஆட்சியில் இருந்தால் தான் நீங்கள் செலுத்தும் வரி உங்களுக்கு சேவையாக, ரோடாக அமையும். பரம்பரை பரம்பரையாக உட்கார்ந்து ஆட்சி செய்பவர்களுக்கு மக்கள் கஷ்டப்பட்டு செலுத்தும் வரியை தங்கள் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வதற்கு தயங்க மாட்டார்கள். அடுத்த முறை ஓட்டுப் போடும்போது இதையெல்லாம் மனதில் கொண்டு ஓட்டு போடுங்கள்.