பள்ளி சுவரில் விரிசல்பல்லடம் உழவர் சந்தை அருகே உள்ள அரசு பள்ளி சுவர் விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானலும் விழும் நிலையில் உள்ளது. பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.- சேகர், பல்லடம்.வீணாகும் தண்ணீர்திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி அருகே, மிஷின் வீதி சந்திப்பில், குழாய் உடைந்து தண்ணீர் ஒரு மாதமாக வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- தினேஷ்குமார், மிஷின் வீதி. (படம் உண்டு)திருப்பூர், அவிநாசி ரோடு, அம்மாபாளையம் வளைவில், குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து, நாள் முழுதும் வீணாகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.- இளமாறன், அம்மாபாளையம். (படம் உண்டு)திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் ஸ்டாப்பில், கேட்வால்வு பழுதாகி, தண்ணீர் வீணாகிறது. சாலை குழியாகி விட்டது. சரிசெய்ய வேண்டும்.- காந்திமதி, கே.பி.என்., காலனி. (படம் உண்டு)காற்றில் மாசுசேவூர் - போத்தம்பாளையம் ரோட்டில், பழைய பொருட்களை சேகரிக்க குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. அப்பகுதி முழுதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்து, காற்று மாசு ஏற்படுகிறது.- சுப்ரமணி, சேவூர். (படம் உண்டு)நாய்த்தொல்லைதிருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. மாநகராட்சி மூலம் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.- மகாலிங்கம், ஸ்டேட் பாங்க் காலனி. (படம் உண்டு)திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை சென்னியப்பா நகரில் கழிவுநீர் குழாய்களை சரிவர பதிக்காமல், அப்படியே ரோடு போட்டுள்ளனர். ரோட்டுக்கு மேல் கழிவுநீர் வெளியேறி வருகிறது.- ஹரிஷ், சென்னியப்பா நகர். (படம் உண்டு)கால்வாய் கட்டுங்க!திருப்பூர், 57 வது வார்டு, ஜோதி நகரில் சாக்கடை கால்வாய் வசதியில்லை. கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. - சத்தியசீலன், ஜோதி நகர். (படம் உண்டு)இடையூறாக லாரிகள்திருப்பூர், எஸ்.பெரியபாளையம் மாடர்ன் சிட்டி, வெற்றிவேல் நகர் குடியிருப்போர் காலனி செல்லும் வழியில் லாரிகள் இடையூறாக நிறுத்தி வைக்கப்படுகிறது.- ரங்கசாமி, வெற்றிவேல்நகர். (படம் உண்டு)கால்வாய் அடைப்புதிருப்பூர், அனுப்பர்பாளையம் புதுார், வேலம்பாளையம் ரிங்ரோட்டில், கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.- தங்கவேல், அனுப்பர்பாளையம்புதுார். (படம் உண்டு)திருப்பூர், பார்க்ரோட்டில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது.- வின்சென்ட்ராஜ், ராயபுரம். (படம் உண்டு)திருப்பூர், டீச்சர்ஸ் காலனி, மூன்றாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அப்படியே தேங்கி நிற்கிறது.- ராஜேஸ்வரி, டீச்சர்ஸ்காலனி.குப்பை தேக்கம்திருப்பூர், 27 வது வார்டு, வலையங்காடு, மாகாளியம்மன் கோவில் முன் மரத்தின் இலைகள் குப்பையாக குவிந்துள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- ராம்குமார், வலையங்காடு. (படம் உண்டு)செந்நீராக குடிநீர்கொடுவாய் பகுதியில் வினியோகிக்கப்படும் அத்திக்கடவு திட்ட குடிநீருடன் மழைநீர் கலந்து செந்நீராக வினியோகமாகிறது. மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.- பரணிதரன், கொடுவாய். (படம் உண்டு)குடிநீர் தாமதம்திருப்பூர், முதலிபாளையம் ஊராட்சி பகுதிக்கு, 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிநீரின்றி மக்கள் பெருத்த சிரமம் அடைகின்றனர்.- பாஸ்கர், முதலிபாளையம்.