உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி டி.எஸ்.பி.,யின் டிரைவர் விபத்தில் பலி

அவிநாசி டி.எஸ்.பி.,யின் டிரைவர் விபத்தில் பலி

திருப்பூர்;விருதுநகர் அருகே, விபத்தில் சிக்கிய அவிநாசி டி.எஸ்.பி.,யின் டிரைவர் பலியானார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி டி.எஸ்.பி., பவுல்ராஜூக்கு, பெருமாநல்லுார் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ்காரர் அருள்குமார், 36 டிரைவராக பணியாற்றி வந்தார்.கடந்த 5ம் தேதி டி.எஸ்.பி., அளித்த பணிக்காக, அருள்குமார் ஆட்டோ ஒன்றை எடுத்து கொண்டு, திருநெல்வேலிக்கு புறப்பட்டுள்ளார். டி.எஸ்.பி., அலுவலக போலீஸ்காரர் வெங்கடாச்சலம் உடனிருந்தார்.விருதுநகர் அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக ரோட்டின் பக்கவாட்டில் மோதி ஆட்டோ விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அருள்குமார் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை