| ADDED : நவ 26, 2025 07:02 AM
திருப்பூர்: திருப்பூரில் ரோட்டில் நிறுத்தி சென்ற டூவீலருக்குள், இரண்டு அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூரை சேர்ந்தவர் மனோஜ், 35. இவர் குமரன் ரோட்டில் உள்ள திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கடூவீலரில் சென்றவர், ஸ்டேஷனுக்கு வெளியே டூவீலரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர், டூவீலரை எடுக்க சென்றார். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில், இரண்டு அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு, டூவீலருக்குள் புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பொதுமக்கள் உதவியோடு பாம்பை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால், டூவீலரின் சூடு தாங்க முடியாமல், உள்ளே இருந்த பாம்பு வெளியேறி சென்றது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், டூவீலருக்குள் பாம்பு நுழைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.