உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாகுபடி பரப்பிற்கேற்ப  உலர்களங்கள் தேவை 

சாகுபடி பரப்பிற்கேற்ப  உலர்களங்கள் தேவை 

உடுமலை,; கிராமப்புறங்களில் சாகுபடி பரப்பை கணக்கிட்டு, கூடுதலாக உலர் களங்கள் கட்ட வேண்டும் என குடிமங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., மண்டல பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனத்துக்கு மக்காச்சோளம் உட்பட பல சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், விளைபொருட்களை காய வைக்க தேவையான உலர்களங்கள் இல்லாமல், விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமம் வாரியாக அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து, விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலான கிராம விவசாயிகள், தங்கள் கிராமத்துக்கு கூடுதல் உலர் களம் அமைக்க வேண்டும் என மனுக்கொடுத்தனர். இந்த மனுக்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், இந்த சீசனில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்த சீசனுக்குள், கிராமங்களின் சாகுபடி பரப்பை கணக்கிட்டு அதற்கேற்ப உலர்களங்கள் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ