உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டி.எஸ்.சி., - டான் போஸ்கோ அணிகள் அபாரம்!

டி.எஸ்.சி., - டான் போஸ்கோ அணிகள் அபாரம்!

திருப்பூர்; திருப்பூர் 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' சார்பில், அகில இந்திய அளவில், 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும், டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி - 2025, கிரிக்கெட் போட்டி திருப்பூரில் நடந்து வருகிறது.திருப்பூர் 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' சார்பில், 16 வயதுக்கு உட்பட்ட அகில இந்திய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, திருப்பூர், முருகம்பாளையம், வயர்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில், கடந்த, 12ம் தேதி துவங்கியது.இரண்டாம் நாளான நேற்று, முதல் போட்டியில் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி டாஸ் வென்று பீல்டிங் செய்தது. பேட்டிங் செய்த திரிபணித்துரா கிரிக்கெட் அகாடமி அணி, 25.4 ஓவரில், பத்து விக்கெட் இழப்புக்கு, 86 ரன் எடுத்தது. திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி பவுலர் நிதிலன் ஆறு ஓவர் வீசி, 15 ரன் கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.எளிய இலக்கை விரட்டிய டி.எஸ்.சி., அணி, 13.5 ஓவரில், மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை (87 ரன்) எட்டியது.பவுலிங்கில் அசத்திய நிதிலன் பேட்டிங்கிலும் அசத்தினர். 30 பந்துகளில், மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன், 36 ரன் எடுத்து, ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்; அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற சென்னை டான் போஸ்கோ அணி பேட்டிங் செய்தது. 30 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 110 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பேட்ஸ்மேன் ஹரிசுப்ரமணியம், 23 ரன் எடுத்தார்.கேரளாவின், ஆர்.எஸ்.சி., எஸ்.ஜி., கிரிக்கெட் அணி, பவுலர் சிவதத்சுதிஷ் ஆறு ஓவர் வீசி, 33 ரன் கொடுத்து, மூன்று விக்கெட் கைப்பற்றினார். ேஹமந்த் ஆறு ஓவர் வீசி, 17 ரன் கொடுத்து, மூன்று விக்கெட் கைப்பற்றினார்.இலக்கை விரட்டிய கேரளாவின், ஆர்.எஸ்.சி., எஸ்.ஜி., கிரிக்கெட் அணி, 28.5 ஓவர் நிலைத்து நின்று விளையாடி, பத்து விக்கெட் இழந்து, 102 ரன் எடுத்தது; எட்டு ரன் வித்தியாசத்தில், சென்னை டான் போஸ்கோ அணி அபார வெற்றி பெற்றது.பவுலிங்கில் கோலோச்சிய சென்னை டான் போஸ்கோ அணி பவுலர், ஆரியன்ஜமாத், ஆறுஓவர் வீசி, ஒன்பது ரன் மட்டுமே கொடுத்து, ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.அசத்தலான பந்து வீசி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற, சென்னை டான் போஸ்கோ அணி பவுலர், ஆரியன்ஜமாத்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. எட்டு அணிகள் பங்கேற்றுள்ள டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபியில் நான்கு போட்டிகள் முடிந்துள்ளது.வரும், 17 வரை லீக் போட்டிகள் நடக்கிறது. தகுதி பெறும் அணிகள், 18 ம் தேதி அரையிறுதியில் சந்திக்கிறது. கோப்பை யாருக்கு என்பதை இறுதி செய்யும், இறுதி போட்டி வரும், 19ம் தேதி நடக்கவுள்ளது. போட்டி களை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்; கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து போட்டிகளை கண்டுகளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை