உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாய ஆலை உரிமையாளர்கள் தினமலர் நாளிதழுக்கு பாராட்டு

சாய ஆலை உரிமையாளர்கள் தினமலர் நாளிதழுக்கு பாராட்டு

திருப்பூர்; திருப்பூர் சாய ஆலை கள் சந்தித்து வரும் சவால்கள் தொடர்பாக, உலக சுற்றுச்சூழல் தினத்தில் வெளியான 'தினமலர்' நாளிதழ் செய்திக்கு, சாய ஆலை உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி, பொதுநல விழிப்புணர்வுக்காக, 'தினமலர்' நாளிதழ் திருப்பூர் இணைப்பில், ஒரு பக்க அளவில்செய்திகள் வெளியாயின. இதில், சாய ஆலைகள் சந்திக்கும் சவால்கள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட சாதனை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.சாய ஆலைகளின் சவால்கள் மற்றும் தீர்வுகளை எதிர்நோக்கி, 'பசுமை அங்கீகாரம் வேண்டும் - எதிர்நோக்கும் சாய ஆலைகள்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியுள்ளதாவது:'தினமலர்' நாளிதழில், 'பசுமை அங்கீகாரம் - எதிர்நோக்கும் சாய ஆலைகள்' என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை மிக அருமையாக உள்ளது. அதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு, சாய ஆலைகள் சார்பில், நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.சாய ஆலைகள் பின்பற்றி வரும் 'பூஜ்ஜிய நிலை' சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் ஏற்படக்கூட மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை பகிர்ந்துகொள்ள, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்' என்ற எங்களது வேண்டுகோளையும், முன்வைத்துள்ள 'தினமலர்' நாளிதழுக்கு, மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி இந்தசெய்தி வெளி யானது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதுடன், சாய ஆலைகளின் செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் நம்புகிறோம்.இவ்வாறு, காந்திராஜன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை