மேலும் செய்திகள்
குளிர்பானத்தில் பூச்சி இளைஞர் அதிர்ச்சி
19-Sep-2024
பல்லடம் : திருப்பூரில் இருந்து ஆவின் பால் ஏற்றிய லாரி ஒன்று நேற்று அதிகாலை பல்லடம் நோக்கி வந்தது. ராயர்பாளையம் வரும்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, ரோட்டின் நடுவில் இருந்த தெருவிளக்கு கம்பத்தின் மீது மோதியது. இதில், மின் கம்பம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் இப்பகுதியில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் பொக்லைன் உதவியுடன் உடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தால், பல்லடம் - -திருப்பூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Sep-2024