உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊழியர் போராட்டம் வாபஸ்; ரேஷன் கடைகள் செயல்பாடு

ஊழியர் போராட்டம் வாபஸ்; ரேஷன் கடைகள் செயல்பாடு

தமிழகம் முழுவதும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள், விற்பனை சங்கங்கள் சார்பில் ரேஷன் கடைகள் இயங்குகின்றன. பொருள் இருப்பு குறைகள் குறித்த அபராத விதிப்பில் மாற்றம் வேண்டும்; கட்டுப்பாடற்ற பொருள் விற்பனை கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு சங்க அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 21 ம் தேதி துவங்கியது. பெரும்பாலான ரேஷன் கடைகள் மூடப்பட்டதால், பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.ஊழியர்கள் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நேற்று கடைகள் திறக்கப்பட்டு, ரேஷன் பொருள் வினியோகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை